கடையநல்லூரில் 7 இடங்களில் நீர்மோர், தண்ணீர் வழங்கல்
கடையநல்லூரில் 7 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நீர்மோர், தண்ணீர் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அதன் நிர்வாகிகள், அவர் அவர் பகுதியில் தண்ணீர்பந்தல் திறக்க வேண்டும் என, மாநில தலைவர் எம்எஸ் சுலைமான் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அணைத்து கிளை சார்பில் கடையநல்லூர் புதிய மற்றும் பழைய ஆஸ்பத்திரி, கிருஷ்ணாபுரம், புதிய பேருந்து நிலையம் மற்றும் மணிக்கூண்டு, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் உட்பட 7 இடங்களில் தண்ணீர் பந்தலில் அமைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வாட்டர் கேன்கள் நிரப்பப்பட்டு தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தண்ணீர்ப் பந்தலில் தினந்தோறும். நீர்மோர், தர்பூசணி வழங்கப்படும். இதற்கான தொடக்க விழா தவ்ஹீத் ஜமாத் மாவட்ட அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட துணை தலைவர் செய்யது மசூது சாஹிப், பீர்முகம்மது, புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான், கடையநல்லூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணிகளை வழங்கினார்.
இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளை நிர்வாகிகள் அப்துல் ஜப்பார், நல்லூர் சுலைமான், பாதுஷா, சேகானா, அலி,ஹசன், உமர் அலி ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
இதில் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் , அனைவரும் வாங்கி குடித்தனர். தகிக்கும் மக்களுக்கு தாகம் தீர்க்கும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.