வாக்கு பெட்டியை எடுக்க விடாமல் கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

புன்னையாபுரம் வாக்கு சாவடியில், வாக்கு பெட்டியை எடுத்து செல்ல விடாமல் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்;

Update: 2021-10-09 17:45 GMT

 புன்னையாபுரம் வாக்கு சாவடியில், வாக்கு பெட்டியை எடுத்து செல்ல விடாமல் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்கு பெட்டியை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தென்காசி மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பதவிக்கு போட்டியிடும் தர்மர் என்பவருக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டை மை சீல் வைத்து மடிக்கும் போது அது வேறு சின்னத்திலும் அழுத்தமாக பதிவதாகவும், இதனால் அந்த வாக்குகள் செல்லாத வாக்காக அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறியும், இதனை சரி செய்ய கோரி புன்னையாபுரம் வாக்கு சாவடியில், வாக்கு பெட்டியை எடுத்து செல்ல விடாமல் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள், அந்த வாக்கு சாவடி வாசலில் அமர்ந்து போராடி வந்தனர்.இந்த நிலையில், அதிகாரிகள் நடத்திய  பேச்சுவார்த்தைக்கு பின்னர், எழுத்து பூர்வமாக  கடிதம் பெற்ற பிறகே போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News