தேமுதிகவை கேள்வி கேட்டவர்கள் இப்போது எங்கே? விஜய பிரபாகரன் கேள்வி
தேமுதிகவை பார்த்து கேள்வி கேட்டவர்கள் இப்போது எங்கே என, அதிமுகவுக்கு விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.;
ஆய்க்குடி பகுதியில் தேமுதிக வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் முருகன் இல்ல விழாவில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசினார்.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் தேமுதிக வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் முருகன் இல்ல பூப்புனித நீராட்டு விழாவில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய விஜய பிரபாகரன், இந்த பகுதியில் சங்கரன்கோயில் என்றவுடன் எனக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதிமுகவினர் சட்டசபையில், தேமுதிக தலைவர் தலைவர் விஜயகாந்தை பார்த்து, சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் ஜெயிப்பதற்கு தேமுதிகவுக்கு திராணி இருக்கிறதா என்று கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது. அன்று தேமுதிகவை பார்த்து கேட்டவர்கள், இன்று எங்கு இருக்கிறார்கள் என,அதிமுகவினரை அவர் சாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரேநாடு ஒரே தேர்தலை பொறுத்தவரை அதனை எதிர்கொள்ள தேமுதிக தயாராக இருப்பதாக தெரிவித்தார்.