கேரளாவிற்கு அதிக எடையுடன் கனிம வளங்கள் கடத்திய வாகனங்களுக்கு அபராதம்

தென்காசி அருகே கேரளாவிற்கு அதிக எடையுடன் கனிம வளங்கள் கடத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-03-17 02:37 GMT

தமிழக -கேரள எல்லையில் நிற்கும் வாகனங்கள்.

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லையான புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் அதிகப்படியான எடையுடன் கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதாக புகார்கள் தொடர்ந்து இருந்து வந்த நிலையில் இன்று  கனிம வாகனங்கள் சோதனைசாவடி வழியாக செல்ல அனுமதிக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வாகனங்களையும் எடை யிட்டு அதற்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதால் ஆங்ககே சாலைகளில் வாகனங்கள்.நிறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள் சாலை ஓரங்களில் நிற்கின்றனர்

பல வாகனங்களில் ஓட்டுனர்கள் இல்லை. சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது வரை 13 வாகனங்களுக்கு ரூபாய் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டு ஓட்டுனர்கள் சென்றுவிடுகின்றனர். இன்று முழுவதும் சோதனை மற்றும் அபராதம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பல வாகனங்கள் திரும்பி செல்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களை பிடித்து ரூ. 2 ஆயிரம் அபராதமும் அதிக எடை ஒரு டண்ணுக்கு 1000 ரூபாய் என ஒரு வண்டிக்கு சுமார் 13 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அதிக எடையுடன் ஒவ்வொரு வாகனத்திலும் சுமார் 10 முதல் 20 டன் வரை அதிகப்படியான கனிம வளக்கடத்தல் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அபராதத்தை சார் நிலை கருவூலத்தில் கட்டியே வண்டியை எடுக்க முடியும் நிலை உள்ளது.

Tags:    

Similar News