தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்

தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.;

Update: 2022-04-22 02:41 GMT

வல்லம் அன்னை தெரசா ஆர்சி மேல்நிலைப்பள்ளியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

தமிழக பொது சுகாதாரத் துறையின் சார்பில், மத்திய அரசு இணைந்து நடத்தும் சுகாதார திருவிழா, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் தென்காசி வட்டாரம், வல்லம் அன்னை தெரசா ஆர்சி மேல்நிலைப்பள்ளியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார்  தலைமையேற்று துவக்கி வைத்தார்.

இதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கண் மருத்துவம், காது-மூக்கு தொண்டை, பல், குழந்தைகள் மருத்துவம், சித்த மருத்துவ சிகிச்சைகள் கண்காட்சிகள் மூலம் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை, இ- சஞ்சீவினி எனப்படுகிற தொலைபேசி வாயிலாக பொது பரிசோதனை ஆலோசனை போன்ற சேவைகள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட, ஒன்றிய, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மரு.அனிதா, மரு.R.உமாதேவி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.வெள்ளைச்சாமி, துணை இயக்குநர் காசநோய், மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் உட்பட அரசு அலுவலர்கள் சுகாதாரத்துறையினர், மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News