சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 112 வது நினைவு நாள் அனுசரிப்பு!

சுதந்திரப் போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை;

Update: 2023-06-17 07:00 GMT

பட விளக்கம்: சுதந்திரப் போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தபோது எடுத்த படம்

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 112- வது நினைவு தினம் அரசு சார்பில் அனுசரிப்பு. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 112-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் உள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள வாஞ்சிநாதன் திரு உருவ சிலைக்கு அரசு சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட இந்த நிகழ்வில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாஞ்சிநாதன் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News