மேக்கரையில் சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

செங்கோட்டை அருகே மேக்கரையில் சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

Update: 2021-10-05 13:45 GMT

மேக்கரை கோட்டை மலையில் அமைந்துள்ள சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள மேக்கரை கோட்டை மலையில் அமைந்துள்ள சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜை பூர்த்தி விழா நடைபெற்றது.

இதையொட்டி,  காலையில் 9 வித யாகங்கள் நடத்தப்பட்டு 12 அடி உயரத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வனபத்ரகாளி, வன சித்தி விநாயகர், வனச்சுடலை மாடன், வனசித்த சிவலிங்கம் ஆகிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு,  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிவாச்சாரியார்கள் தம்பிரான், பாபு ஆகியோர் கும்பநீர் ஊற்றி சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். வனபத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து காளிப்படையல் வைத்து உச்சிகால பூஜை நடந்தது. சுயம்பு வனபத்ரகாளி அம்மன் கோவில் நிறுவனர் மற்றும் அறங்காவலர் மோனிஷ் மத்தியாஸ், டிரஸ்டி அனிலா மோனிஷ் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News