செங்கோட்டை நகராட்சியில் 13 இடங்களில் தடுப்பூசி முகாம்.
செங்கோட்டை நகராட்சியில் இன்று 13 இடங்களில் தடுப்பூசி போடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது;
தமிழ்நாடு அரசின் உத்தரவின் அடிப்படையில் செங்கோட்டை நகராட்சி பகுதியில் 10.10.2021 அன்று மெகா இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் அடிப்படையில் நகராட்சி பகுதியில் மொத்தம் 13 இடங்களில் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த 13 தடுப்பூசி முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி வழங்கப்படும் என பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு வார்டுகளிலும் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாத நபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்கனவே டோக்கன் வழங்கியவர்களை முகாம்களுக்கு அழைத்து வர கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2 ஆட்டோக்களில் மைக் மூலம் தெருத்தெருவாக விழிப்புணர்வு பிரச்சாரம் இலவச தடுப்பூசி முகாம் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிமுதல் முகாம் ஆரம்பிக்க உள்ளதால் முகாம்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட முகாமிற்கான ஏற்பாடுகளை ஆணையர் செல்வி. நித்தியா உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் ராமசந்திரன் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்செல்வி ஆலோசனையின் பேரில் மருந்துவ அலுவலர் ராஜகோபால்மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.