ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழப்பு

தென்காசி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழந்தனர்.

Update: 2023-12-11 09:35 GMT

சாலை விபத்தில் காயம் அடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடையநல்லூர் அருகே சபரிமலைக்கு சென்று திரும்பி கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் கார் டயர் வெடித்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

வேலூரை சேர்ந்த ஐந்து பேர் சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடையநல்லூரை அடுத்த அச்சம்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த காரின் டயர் வெடித்து சாலையின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் சித்தூர் பேப்பம்பள்ளியை சேர்ந்த முகில்ரெட்டி (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போகநல்லூர் சுந்தரேசபுரம் ஜே.ஜே. நகரை சேர்ந்த மூதாட்டி ராமர் மனைவி மாலையம்மாள் (55) படுகாயமடைந்தது என தெரிய வந்தது.தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த முகில் ரெட்டியின் உறவினர்கள் கோடீஸ்வரன் (44) ப்ரித்விராஜ் (6), டிரைவர் சுரேஷ் உள்ளிட்ட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் காவல்துறையினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News