சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது
கடையநல்லூர் அருகே சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு;
அச்சன்புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நெடுவயல் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் செல்லையா தலைமையிலான காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, அச்சன்புதூரை சேர்ந்த சங்கர் (39) மற்றும் வாவா நகரம் பகுதியை சேர்ந்த முகம்மது முஸ்தபா (33) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக புகையிலை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
இருவர் மீதும் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 13,874 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.