கடையநல்லூர் அருகே மான் வேட்டையாடிய இருவர் கைது: ரூ.40 ஆயிரம் அபராதம்
கடையநல்லூர் அருகே மான் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;
கடையநல்லூர் அருகே மான் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மான்குட்டியை வேட்டையாடிய இருவர் கைது 40 ஆயிரம் ரூபாய் அபராதம்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேலே சொக்கப்பட்டி பகுதியில் இருந்து கருப்பாநதி செல்லும் வழியில் கடையநல்லூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு மான் குட்டி ஒன்றை வேட்டையாடி வைத்திருந்த இருவரை கைது செய்தனர்.
அந்த மான்குட்டியானது கருப்பாநதி அணைக்கு அருகே உள்ள வனப்பகுதிக்கு செல்லும் வழியில் வேட்டையாடப்பட்டதாக கூறி மேல சொக்கம்பட்டியை சேர்ந்த லெட்சுமணன், கருப்பசாமி ஆகிய இருவரை கைது செய்து வன வழக்கு பதிவு செய்து ரூபாய் 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.