புத்தாண்டை முன்னிட்டு பண்பொழி கோவிலில் குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெரிசல்
திருமலை பன்பொழி குமாரசாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வதால் போக்குவரத்து நெரிசல்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருமலை பன்பொழி குமாரசாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக வழங்கிய திருமலை குமாரசாமி கோயில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலை முதலே இந்த கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வரத் தொடங்கின.
இதனையடுத்து பொதுமக்கள் வரத்து அதிகரிப்பால் வாகனங்கள் வெளியே செல்ல முடியாமல் உள்ளே வரமுடியாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கோயில் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.