திருநெல்வேலி - செங்கோட்டை மின்சார ரயில் சேவை தொடக்கம்!
திருநெல்வேலி - செங்கோட்டை மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது!;
செங்கோட்டை திருநெல்வேலி வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை இன்று தொடங்கியது.
மதுரை - கொல்லம் வழித்தடங்களிலும் மதுரை- திருநெல்வேலி வழித்தடங்களிலும் அகல ரயில் பாதை மற்றும் மின்சார பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.
முதற்கட்டமாக விருதுநகர்- திருநெல்வேலி வழித்தடங்களில் அகல பாதை மற்றும் மின்சார பாதை பணிகள் முடிவுற்று போக்குவரத்து தொடங்கியது.
மதுரை - செங்கோட்டை - திருநெல்வேலி வழித்தடத்தில் அகலப்பாதைகள் பணிகள் நிறைவடைந்து ரயில் போக்குவரத்து தொடங்கியது. செங்கோட்டை- கொல்லம் வரையிலான வழி தடத்தில் மலைகளை குடைந்து குகை வழியாக பாதை அமைத்ததால் அகலப்பாதை பணிகள் காலதாமதமாக முடிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் செங்கோட்டை செங்கோட்டை வழித்தடத்தில் செங்கோட்டை வரையிலான மின்பாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்தது.
திருநெல்வேலி செங்கோட்டை வழித்தடத்திலும் மின்பாதை பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதேபோல் புனலூர் கொல்லம் வழித்தடத்தில் மின் பாதை பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று திருநெல்வேலி - செங்கோட்டை இடையே முழு நேர மின்சார இன்ஜின் கொண்ட ரயில் சேவை இன்று முதல் துவங்கியது.
அதே சமயம் நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் (06685) மற்றும் மாலை 6 மணிக்கு செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு செல்லும் பாசஞ்சர் (06686) ஆகிய இரண்டு ரயில்கள் மட்டும் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இன்னும் செங்கோட்டை புனலூர் வரையிலான வழித்தடத்தில் மின்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மலைப்பகுதியாக இருப்பதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டு கால தாமதமாக நடைபெற்று வருகிறது.