சங்கரன்கோவில் டிஎஸ்பி மீது மாவட்ட எஸ்.பி.யிடம் இந்து முன்னணியினர் புகார்

சங்கரன்கோவில் டிஎஸ்பி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர்.;

Update: 2021-11-17 10:29 GMT

சங்கரன்கோவில் டிஎஸ்பி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர்.

சங்கரன்கோவில் டிஎஸ்பி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணியினர் புகார் மனு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தர்மத்தூரணி பகுதியில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் போலியாக பத்திரப்பதிவு செய்து நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். இதனைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த மாவட்ட பதிவாளர் பதிவு சட்டம் பிரிவு 83 ன் படி காவல் நிலைத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட ஆணையிட்டார்.

இந்நிலையில் சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் ஜாகிர் உசேன் இந்து முன்னணி நிர்வாகிகளை தரக்குறைவாக பேசி மிரட்டி பொய் வழக்கு போடுவதாக தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து இந்து முன்னணி பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து மற்றும் நகர தலைவர் நாராயணன் ஆகியோர் தலைமையிலான இந்து முன்னணியினர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

Tags:    

Similar News