பறவை பந்தலின் உபயோகம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்த கல்லூரி மாணவிகள்
ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பறவை பந்தலின் உபயோகம் குறித்து எடுத்துரைத்த கல்லூரி மாணவிகள்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் தேவைகளை அறிந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கடையநல்லூரில் உள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராம விவசாயிகளுக்கு நெற்பயிரில் தழைச்சத்து குறைபாட்டினை கண்டுபிடிக்க உதவும் இலைவண்ண அட்டை உபயோகிக்கும் முறைகள் குறித்து விவரித்தனர்.
மேலும், நெற்பயிரில் பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பறவை பந்தலின் உபயோகம் குறித்தும் எடுத்துரைத்தனர். . இந்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.