கடையநல்லூரில் தெரு நாய்கள் அட்டூழியம்: நடவடிக்கை காேரி தவ்ஹீத் ஜமாஅத் மனு
கடையநல்லூரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி ஆணையாளரிடம் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.;
கடையநல்லூரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி ஆணையாளரிடம் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை மனு அளித்தனர்.
கடையநல்லூரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி ஆணையாளரிடம் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை மனு.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்றைய தினம் ஏழு வயது சிறுவனை பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கடித்துக் குதறியது படுகாயமடைந்த சிறுவன் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடையநல்லூர் சுற்றித்திரியும் வெறி நாய்கள் கடந்த ஒரு மாத காலமாக கடையநல்லூர் பேட்டை மலம்பாட்டை ரோடு மற்றும் கிருஷ்ணாபுரம் மலம்பாட்டை ரோடுகளில் நடைபயிற்சிக்கு செல்லுகின்ற பெண்கள் மற்றும் முதியோர்களை அப்பகுதியில் சுற்றிதிரியும் தெருநாய்கள் கடித்து குதறி வருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டை மலம்பாட்டை ரோட்டில் நடைபயிற்சி செய்ய சென்ற இரண்டு பெண்களை கடித்து குதறியதால் அவர்கள் தென்காசி அரசு பொதுமருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணாபுரம் மலம்பாட்டை ரோட்டில் 7வயது சிறுவனை தெருநாய் கடித்து சுடுகாட்டுக்கு பகுதிக்கு இழுத்துச் செல்லும் நேரத்தில் பொதுமக்களால் அச்சிறுவன் காப்பாற்றபட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில காலங்களாக கடையநல்லூர் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களின் அட்டூழியம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த விஷயத்தில் விரைவாக தக்க நடவடிக்கை எடுக்கும்படி தங்களை மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை செயலாளர் நிரஞ்சர் ஒலி குறிப்பிட்டிருந்தார்.