தமிழக கேரளா எல்லையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் வாகன சோதனை

மற்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த கண்காணிப்பு பணியானது தொடர்ந்து நடைபெறும் எனகூறினார்

Update: 2024-04-21 06:49 GMT

பட விளக்கம்: தமிழக கேரளா எல்லையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்

தமிழகத்தில் தேர்தல் முடிவுற்ற பிறகும் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர வாகன தணிக்கை நடைபெற்றது.

18-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக நடந்து முடிவு பெற்றுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளானது தொடர்ந்து அமலில் உள்ளது.

மேலும், விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை இரு மாநில எல்லைப் பகுதியில் வாகன தணிக்கையானது நடைபெறும் எனவும், நாடாளுமன்ற தேர்தல் முழுவதுமாக நடைபெற்று முடியும் வரை இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை காவல்துறை வாகன சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் தலைமையில் வாகன தணிக்கையானது தீவிரமாக நடைபெற்றது.

குறிப்பாக, கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குள் செல்லும் வாகனங்கள் முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இரு மாநில எல்லைப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் முழுமையாக நடைபெற்று முடியும் வரை இந்த சோதனையானது நடைபெறும் எனவும் பண பட்டுவாடா உள்ளிட்ட விஷயங்களை முழுவதுமாக தடுக்கவும், எந்த விதமான அச்சுறுத்தல் இன்றி மற்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில்யில் இந்த கண்காணிப்பு பணியானது தொடர்ந்து நடைபெறும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News