கடையநல்லூர் தனியார் பள்ளியில் நிழல் இல்லாத நாள் கொண்டாட்டம்

கடையநல்லூர் தனியார் பள்ளியில் நிழல் இல்லாத நாள் கொண்டாடப்பட்டது.

Update: 2022-04-14 07:52 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நிழல் இல்லா நாள் குறித்த அறிவியல் விழிப்புணர்வு மாணவர்களுக்கு செயல் விளக்கம் முறையில் அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் இன்று நிழல் இல்லா நாள் ஏற்படும் என அறிவியல் இயக்கம் தெரிவித்திருந்தது. அதன்படி கடையநல்லூர் அருகே உள்ள சாதனா வித்யாலயா பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிழல் இல்லா நாள் குறித்து அறிவியல் விழிப்புணர்வு மாணவர்களிடையே நடைபெற்றது.

இதில் நிழல் இல்லா நாள் என்பது சூரியன் தலைக்கு நேர்மேலே இருக்கும் போது சூரிய ஒளி செங்குத்தாக நம் மீது படும். அப்போது நிழல்கள் நமது கால்களுக்கு அடியில் படும். இதன் காரணமாக நிழலை நம்மால் பார்க்க முடியாது. இதனை நிழல் இல்லா நாள் என்றும், பூஜ்ஜிய நாள் என்றும் அறிவியாளர்கள் கணக்கிடுகின்றனர்.

இந்த அரிய நிகழ்வு விளக்கும் வகையில் செங்குத்தான பொருட்கள் வைக்கப்பட்டும், மாணவர்கள் மனித சங்கிலியாக வட்டமிட்டும் நிழல் இல்லா நாளை கண்டுகளித்தனர். இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் மயில்கண்ணு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயளாளர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News