தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட கோரிக்கை
தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட இந்திய நாடார்கள் பேரமைப்பு துணைத்தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.;
சாம்பவர்வடகரை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நடுநிலைப்பள்ளியில் நடந்த சிபா ஆதித்தனார், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த தினவிழாவில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர். அகரகட்டு லூர்து நாடார் மரியாதை செலுத்தினார்
தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டுமென இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார் தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நடுநிலைப்பள்ளியில் வைத்து தமிழர் தந்தை சிபா ஆதித்தனார் 117வது பிறந்த தினவிழா டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாள் ஆகிய இருபெரும் விழாக்கள் நடைபெற்றன.
விழாவில் இந்திய நாடார் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை வகித்து சி.பா.ஆதித்தனார், டாக்டர் சிவந்தி ஆதித்தன் ஆகியோர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றிய தமிழுக்காக பெரும் பங்கினை வைத்தவர் சி.பா.ஆதித்தனார் எனவும் தென்காசி ராஜகோபுரத்தை கட்டிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெயரை தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின் முறை கமிட்டி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்திய நாடார்கள் பேரமைப்பின் தென்காசி மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து, தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் மற்றும் சாம்பவர்வடகரை மாரியப்பன், குற்றாலமாடன், மணிவண்ணன், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.