மலை உச்சியில் கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
தமிழக - கேரள எல்லை வனப்பகுதியின் மலை உச்சியில் கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை.
தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை செங்கோட்டை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மயிலாடும்பாறை மலை உச்சியில் தூர்நாற்றம் வீசி உள்ளது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடல் புதைக்கபட்ட நிலையில் இருந்ததையடுத்து செங்கோட்டை வட்டாச்சியர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதில் உடலானது கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தது ஆண் சடலம் என்பது கண்டறியப்பட்டது. தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணி மாறன் தலைமையில், காவல் துறையினர் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக புளியரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.