கடையநல்லூர் அருகே சிதலமடைந்த பள்ளியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கடையநல்லூர் அருகே வடகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் உள்ள நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதன் வளாகத்திலே அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளது. இதில் முப்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் அருகில் இடிந்த விழும் ஆபத்தான நிலையில் பழடைந்த கட்டிடம் மற்றும் கழிப்பறைகள் உள்ளன. விடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் மேல் மரங்களும் முளைத்து மிக மோசமாக உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.
அதேபோன்று பள்ளி வளாகத்தில் புதர்கள் அதிக அளவில் மண்டி கிடப்பதால் விஷ சந்துகள் நடமாற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்கும் வரும் குழந்தைகள் தினமும் உயிர் பயத்துடன் வந்து செல்வதாகவும், உடனே பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.