கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் வரும் 28ஆம் தேதி மின் தடை
கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் வரும் 28ஆம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையங்களில் 28.06.2022 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மேற்படி மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதால் கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது.
கிராமங்களில் மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்படியும் மின் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனால் சிவகிரி, தேவிபட்டிணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிகுளம், இராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடைப்பட்டி மற்றும் வடுகபட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.