கோரம் இல்லை என இரண்டாவது முறையாக செங்கோட்டை நகர் மன்றகூட்டம் ஒத்திவைப்பு!
கோரம் இல்லை என இரண்டாவது முறையாக செங்கோட்டை நகர் மன்றகூட்டம் ஒத்திவைப்பு;
கோரம் இல்லை என செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு
செங்கோட்டை நகர் மன்ற கூட்டத்தில் சேர்மனை கண்டித்து அதிமுக, பாஜக உட்பட எந்த நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில் கூட்டத்திற்கு கோரம் இல்லை என 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. இதில் 10 அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களும், 4 பாஜக நகர்மன்ற உறுப்பினர்களும், 10திமுக கூட்டணி நகர்மன்ற உறுப்பினர்களும் உள்ளனர். நகர மன்ற தலைவியாக திமுகவைச் சேர்ந்த ராமலக்ஷ்மி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நகர்மன்ற தலைவி வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை, வளர்ச்சித் திட்டத்தில் பங்களிப்பு முழுமையாக தரவில்லை என நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை எழுப்பி வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த 4 நகர்மன்ற உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்ற நிலையில் கூட்டத்திற்கு கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று சாதாரண கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்திலும் திமுக உட்பட எந்தவித கவுன்சிலர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் வருகை பதிவேட்டில் திமுக நகர மன்ற தலைவி உட்பட யாரும் கையெழுத்து இடாத காரணத்தினால் இந்த கூட்டத்திற்கும் கோரம் இல்லை என ஆணையாளர் கூட்டத்தை ஒத்தி வைத்ததாக அறிவித்தார்.
செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் இரண்டாவது முறையாக கோரம் இல்லாததுததால் ஒத்திவைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிமுக கவுன்சிலர்கள் கூறுகையில், நகர மன்ற தலைவி அதிகாரப் போக்கில் செயல்படுவதாகவும், மக்களின் வளர்ச்சி திட்டத்தில் பங்களிப்பை செலுத்தப்படவில்லை எனக்கூறி அவரை பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.