என்ஐஏ சோதனையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

NIA Raid -தென்காசியில் என்ஐஏ சோதனையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-23 05:26 GMT

என்ஐஏ சோதனையை கண்டித்து தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

NIA Raid -நேற்று தமிழக முழுவதும் கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திலும் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி தென்காசி மாவட்டம், பண்பொழி கிராமத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா அவரது வீட்டில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் திடீரெனப் அப்பகுதியில் உள்ள பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையை கண்டித்து கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட போவதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

காலை பெரிய பள்ளிவாசல் பகுதியில் இருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 60-க்கும் மேற்பட்டோர், சோதனையை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஏகே அமின் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் திப்பு சுல்தான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News