கடையநல்லூரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

கடையநல்லூரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Update: 2022-09-26 03:30 GMT

போலீசாரின் அணிவகுப்பு.

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடத்தியதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து கடையநல்லூரில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் கடையநல்லூரில் ஆயுதப்படை போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.

இந்த அணிவகுப்பில் புளியங்குடி டிஎஸ்பி அசோக் தலைமையில் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் கமாண்டோ படை போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இந்த கொடி அணிவகுப்பு பேரணி கிருஷ்ணாபுரம் இருந்து தொடங்கி முத்து கிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், போலீஸ் நிலைய தெரு, புதூர் பள்ளிக்கூடம் தெரு, பஜார் ரோடு, மதீனா நகர், பேட்டை, ஆஸ்பத்திரி மேற்கு மலம் பாட்டை ரோடு, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் கடையநல்லூர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.

இந்த அணிவகுப்பில் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி , கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜன் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், தனிப்பிரிவு தலைமை காவலர் மஜித் மற்றும் உள்ளூர் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News