காங்கிரஸ் கட்சி சார்பில் கடையநல்லூர் நகராட்சி ஆணையரிடம் மனு

பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கடையநல்லூர் ஆனணயாளரிடம் காங்கிரஸ் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது;

Update: 2021-12-07 11:57 GMT

அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கடையநல்லூர் ஆனணயாளரிடம் காங்கிரஸ் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் நகர காங்கிரஸ் தலைவர் சமுத்திரம், தென்காசி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் டாக்டர் AMS முகமது ரபி, SRS.சுரேஷ்  தலைவர் கிருஷ்ணாபுரம் பால் உற்பத்தியாளர் சங்கம், நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் G.சின்ன தங்கம், சிறுபான்மை துணை தலைவர் விஸ்வா ஹசன் ஆகியோர் ரஹ்மானியாபுரம் 10வது தெரு மக்கா நகர் பின்புறம் மையத்தான் கரை முதல் தெரு முடியும் வரை பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் மற்றும் அனைத்து தெரு பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கடையநல்லூர் ஆனணயாளரிடம் காங்கிரஸ் கட்சி சார்பாக மனு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News