தென்காசி மாவட்டத்தில் டிரோன் மூலம் வயல்வெளிகளில் பூச்சிமருந்து தெளிப்பு
நயினாரகரம் கிராமத்தில் நெற் பயிர்க்கு டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் முதன் முதலாக வயல்வெளிகளில் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு.
தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழையால் அனைத்து குளங்களும் நிரம்பின. இதனால் விவசாயிகள் தற்போது நெல் பயிரிட்டு உள்ளனர். விவசாய பணிகளுக்கு போதிய கூலியாட்கள் கிடைக்காததால் மாற்று தொழில்நுட்பத்தை நோக்கி விவசாயிகள் செல்ல தொடங்கி உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக இடைகால் அருகே உள்ள நயினாரகரம் கிராமத்தில் சாகுபடி செய்துள்ள நெல் பயிர்க்கு டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
டிரோன் மூலம் தெளிப்பதால் மிகக்குறைந்த அளவு அதாவது 3 ல் 1 பங்கு பூச்சிமருந்து பயன்பாட்டு அளவு குறைகிறது. இதனால் செலவு குறைவு மற்றும் குறைந்த நேரத்தில் விரைவாக தெளித்தல் அதாவது 1 ஏக்கருக்கு 10 நிமிடத்தில் சீராக அனைத்து இடங்களிலும் தெளிக்கலாம். மேலும் சாதாரண முறையில் விசைத் தெளிப்பான் கொண்டு மருந்து தெளிப்பவரின் உடல்நலனும் பாதுகாக்கப்படுகிறது என வேளாண் இணை இயக்குனர் நல்ல முத்துராஜா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குனர், கடையநல்லூர் மற்றும் நயினாரகாம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்குரிய ஏற்பாட்டை உதவி வேளாண்மை அலுவலர்கள் கருப்பசாமி, இராமநாராயணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.