சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை திருடிய நபர் கைது
சாலையில் கிடந்த தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைக்காமல் எடுத்து கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டு தங்க சங்கிலி மீட்பு;
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் கலைபிரியா என்ற பெண் கடந்த (25.12.2021) அன்று அவரது சொந்த ஊரான அச்சம்பட்டிக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக வந்துள்ளார். இந்நிலையில் அவரது தந்தையின் இருசக்கர வாகனத்தில் அச்சம்பட்டியலிருந்து கடையநல்லூர் சென்று கொண்டிருந்த போது அவரது தாலிச் சங்கிலி சாலையில் தவறி விழுந்து தொலைந்து விட்டதாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் பயிற்சி சார்பு ஆய்வாளர் பசுபதி விசாரணை மேற்கொண்டு கலைபிரியா வாகனத்தில் சென்ற அனைத்து இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது கலைப்ரியாவின் தங்கச் சங்கிலி அச்சம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் தவறி விழுந்ததையும் அதை பாலமார்தாண்டபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் எடுத்ததும் தெரியவந்தது.
மேலும் நகையை எடுத்தவர் அதனை உரிய நபர்களிடம் ஒப்படைக்க எந்த முயற்சியும் செய்யாமல் தன் வசம் வைத்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து கனகராஜ் மீது சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை உரிய நபரிடம் ஒப்படைக்காமல் திருட முயற்சி செய்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது