கடையநல்லூரில் பெரியாரின் நினைவு தினம் அனுசரிப்பு

கடையநல்லூரில் பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.;

Update: 2021-12-25 00:30 GMT

கடையநல்லூரில் பெரியாரின் நினைவு தினம்: மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை தலைமையில்  மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு மங்களாபுரத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்து மாலை அணிவித்தார்.

மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சேக்தாவுது, கடையநல்லூர் யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், அணி அமைப்பாளர்கள் இசக்கி பாண்டியன், கருப்பண்ணன், பம்புலி பேரூர் துணைத்தலைவர் முதலியான்கான், நல்லையா, போகநல்லூர் மகேஷ், புதுக்குடி தினேஷ், சுரேஷ் ,சுதாகர், முத்துசெல்வம் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News