தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மறைந்த முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் இளைய மகன் கிருஷ்ணமுரளி கடந்த 19ம் தேதி முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். அவர் கொடிக்குறிச்சி, நயினானகரம் இடைகால்,ஊர்மேலழகியான் வேலாயுதபுரம் ஆகிய ஊராட்சிகளிலும் மாலையில் காசிதர்மம், அச்சன்புதூர் பேரூராட்சி மற்றும் நெடுவயல் ஊராட்சி செங்கோட்டை ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேட்பாளர் சென்ற இடமெல்லாம் பெண்கள் திரண்டு நின்று ஆரத்தி எடுத்தும் அவரை வரவேற்றனர்.மேலும் அவர் பேசும்போது உள்ளூர் வேட்பாளராக உங்களுக்கு அறிமுகம் ஆன நான் உங்கள் வீட்டு பிள்ளையாக ஓட்டு கேட்டு வருகிறேன்,உங்கள் வாக்கை அதிமுகவுக்கு தாருங்கள்,உங்கள் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றித் தருவேன் என்றார்.