சிறப்பு ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை

அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கவனத்திற்கு.;

Update: 2022-04-03 02:48 GMT

அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கவனத்திற்கு...

அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக செல்லும் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தெற்கு ரயில்வே இயக்கும் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் என்று அறிவித்துள்ளதால் பொதுமக்கள் தென்காசிக்கு சென்று ரயில் ஏற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தென்காசி- மதுரை வழித்தடத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கடையநல்லூர் ரயில் நிலையம் திகழ்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்காசி, செங்கோட்டை, கொல்லத்திற்கும், மறுமார்க்கமாக மதுரை, திருச்சி, சென்னைக்கும் பயணிக்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் தினசரி சென்னைக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ், வாரம் 3 முறை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்கின்றன.

திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால் இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கிடையாது, என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்தில் உள்ளனர். கடையநல்லூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறும் பயணிகளுக்கு பெரும்பாலும் தினசரி ரயில்களில் இடம் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் சிறப்பு ரயில்களில் ஏறி செல்ல அதிகம் விரும்புகின்றனர்.

இதுகுறித்து கடையநல்லூர் சுற்றுவட்டார ரயில் பயணிகள் கூறுகையில், ''கடையநல்லூர் ரயில் நிலையத்தை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் திருநெல்வேலி - தாம்பரம் பொங்கல் சிறப்பு ரயிலில் ஏற நாங்கள் தென்காசிக்கு செல்ல வேண்டியதுள்ளது. தீபாவளி விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலி - தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயில் அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட போது கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றதால், இந்த ரயில் மூலம் சுமார் 25,000/- ரூபாய் வருமானம் வந்தது.

ஆகவே திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் நிர்வாகிகள் தெற்கு ரயில்வே மற்றும் மதுரை கோட்டத்திற்கு கோரிக்கை வைக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Similar News