அதிக பாரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களுக்கு அபராதம்
உரிய அனுமதி இன்றியும் அதிக பாரத்துடன் இயக்கப்பட்ட வெளிமாநில வாகனங்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி அபராதம் விதித்தார்.;
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையரின் உத்தவின்படி திருநெல்வேலி மண்டல துணை போக்குவரத்து ஆணையர் மற்றும் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் ஆலோசனைன் படி மோட்டர் வாகன ஆய்வாளர் மணிபாரதி தென்காசி முதல் புளியரை தமிழக எல்லை வரையான பகுதிகள் அதிக பாரம் ஏற்றி செல்லும் வெளிமாநில சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார். அதிக பாரம் ஏற்றிய மூன்று சரக்கு வாகனங்களுக்கு அபாரதம் ரூ 60 ஆயிரமும், அந்த வாகனங்கள் தமிழ்நாடு சாலை வரி கட்டாமலும் உரிய பெர்மிட் ஆவணங்கள் இல்லாமல் தமிழ்நாடு சாலையில் வந்ததால் வாகனம் சிறை பிடிக்கப்பட்டு செங்கோட்டை காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தப்பட்டுள்ளது. மேலும் இது போன்று சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி தெரிவித்தார்.