கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் பண்பொழி நகரீஷ்வரமுடையார் கோவில் ரத வீதி
பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோவிலுக்குட்பட்ட அறம் வளர்த்த நாயகி சமேத நகரீஷ்வரமுடையார் கோவில் ரதவீதியின் அவல காட்சி.
கழிவுநீர் குளம் போல் காட்சி அளிக்கும் பண்பொழி அறம் வளர்த்த நாயகி சமேத நகரீஷ்வரமுடையார் திருக்கோவில் ரத வீதி.
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோவிலுக்குட்பட்ட பண்பொழி அறம் வளர்த்த நாயகி சமேத நகரீஷ்வரமுடையார் திருக்கோவில் ரத வீதீயின் அவல காட்சி. தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயம் பண்பொழி திருமலைக்கோவில் இந்த ஆலயம் விசாக நட்சத்திர பரிகார ஸ்தலம் தமிழகம் முழுவதும் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் அதிகமான பக்தர்கள் வரும் கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலுக்கு சுமார் 500 ஏக்கருக்கு மேலான சொத்துக்கள் உள்ளது. இதற்கென உதவி ஆனையர் அந்தஸ்த்தில் உள்ள அதிகாரியின் நிர்வாகத்தில் உள்ளது. இக்கோவிலை சார்ந்த அறம் வளர்த்த நாயகி சமேத நகரீஷ்வரமுடையார் திருக்கோவில் பண்பொழி நகரினுள் அமைந்துள்ளது. திருமலைக்கோவில் மலைமேல் உள்ளதால் இக்கோவிலின் அனைத்து முக்கிய விசேஷங்களுக்கும் திருமலை முருகன் கீழே உள்ள பண்பொழியில் சிவன் ஆலயத்தில் வைத்தே திருவிழாக்கள் நடைபெறுவது காலம் தொட்டு நடைபெறும் வழக்கம்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெப்ப உற்ச்சவ விழா நடைபெற்றது. இன்னும் இரண்டு வாரத்தில் தைப்பூச திருவிழா 10 நாட்கள் விமர்ச்சையாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவிலின் ரத வீதியில் அருகிலுள்ள வீடுகளில் உள்ள கழிவுநீர் தேங்கி குளம் போல் பெருகியும் மாட்டு சாண குவியல் பிளாஸ்டிக் குப்பைகள் என சுகாதாரமின்றி அறுவறுக்க தக்க வகையில் அந்த இடம் காட்சியளிக்கிறது.
வரும் திருவிழா நாட்களில் இதன் மேல் நடந்துதான் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க வேண்டும். இதை பண்பொழி பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை, கோவிலை நிர்வாகிக்கும் அதிகாரியும் கண்டு கொள்ளாமல் இருப்பது அங்கு வரும் பக்தர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலய சுற்றுபுறத்தை சுத்தப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமா தென்காசி மாவட்ட நிர்வாகம்.