தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது
தென்காசி அருகே, தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி மற்றும் சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, சாம்பவர் வடகரை கோவிந்தன் என்பவரின் மகன் ராஜ்குமார்(28) என்ற நபரை, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தினார். அவரது பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.