லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

Update: 2021-03-23 04:15 GMT

புளியரையில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியரை சோதனை சாவடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அங்கு சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் ரவி(56) மற்றும் விகேபுரம் பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் ராமசாமி (72) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 63,360 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News