சாம்பவர்வடகரை இந்து கோவிலில் இஸ்லாமியரின் அன்னதானம்
சாம்பவர்வடகரை இந்து கோவிலில் இஸ்லாமியரின் அன்னதானம் நடைபெற்றது.;
அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.
தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட மசூதி திறப்பு விழா நடைபெற்றது. அந்த மசூதிக்கு பல்வேறு சமுதாயத்தை சார்ந்தவர்கள் பல்வேறு மதத்தை சார்ந்தவர்கள் பள்ளிவாசலுக்கு சீர்வரிசை செய்தனர். பல ஊர் மக்களும் அதை பார்த்து வியந்தனர்.
இதே ஊரில் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. அங்கு பொதுமக்களின் பங்களிப்பால் தினமும் மதியம் அன்னதானம் நடைபெறும். இதற்கு சாம்பவர்வடகரை மற்றும் பிற ஊர்களைச் சார்ந்த மக்கள் நன்கொடை வழங்குவர்.
அந்த வரிசையில் மதபேதம் இல்லையென்று நிருபிக்கும் வகையில் அவ்வபோது இஸ்லாமியச் சொந்தங்களும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் இஸ்லாமிய நண்பனின் குடும்பமும் வழங்கியது. அதுபோல் நேற்று ஓர் உறவினர் வழங்கினார்.
சாம்பவர்வடகரை மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஊராக விளங்குகிறது.