தென்காசி அருகே கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தென்காசி அருகே, கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-11-13 00:00 GMT

கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சொக்கம்பட்டி மெயின் ரோடு சுப்பையா என்பவரின் மகன் கருத்தப்பாண்டியன்(64) என்பவரை வரப்பு பிரச்சனையின் காரணமாக கொலை செய்த செல்லையா என்பவரின் மகன் சந்தனபாண்டி(40) என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராமுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், மேற்படி செல்லையா என்பவரின் மகன் சந்தனபாண்டி(40) என்ற நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் ராஜாராம் சமர்பித்தார்.

Tags:    

Similar News