கடையநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது
கடையநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மற்றும் தாம்பரத்தில் 'மக்களாட்சியை பாதுகாப்போம்' எனும் தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் ஒற்றுமை அணிவகுப்பை தடைசெய்து அந்த அமைப்பினரை காவல் துறை நேற்று கைது செய்தது.
இதனை கண்டித்து தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.