ஆட்டோவில் தவறவிட்ட மணி பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
ஆட்டோவில் தவறவிட்ட மணி பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
ஆட்டோ டிரைவர் உரிமையாளரிடம் போலீசார் முன்னிலையில் மணிபர்சை வழங்கினார்.
தென்காசி மாவட்டம்சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாம்பவர் வடகரை பேருந்து நிலையத்தில் பாம்புக்கோவில் சந்தையை சேர்ந்த திவான் பாத்திமா என்பவர் ராமர் என்பவரின் ஆட்டோவில் சுரண்டை சென்றபோது அவரின் ஆட்டோவில் மணி பர்சை மறந்து வைத்துவிட்டு பேருந்தில் ஏறி சென்றுவிட்டார்.
இதனை ஆட்டோ டிரைவரான ராமர் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் காவல் நிலையத்தில் வந்து மனிதாபிமானத்துடன் ஒப்படைத்தார். பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு மேற்படி திவான் பாத்திமா என்பவரை காவல் நிலையம் அழைத்து சார்பு ஆய்வாளர் காசி விஸ்வநாதன் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் ராமர் மூலமாகவே அறிவுரை வழங்கி திவான் பாத்திமாவிடம் அவரது மணி பர்ஸ் ஒப்படைக்கப்பட்டது.