தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு: உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் கோரிக்கை

தமிழகத்தில் தங்கள் மருத்துவ மேற்படிப்பை தொடங்குவதற்கு அரசு உதவக்கோரி உக்ரைலிருந்து மீண்டு வந்த தென்காசி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-08 03:06 GMT

உக்ரைனிலிருந்து திரும்பிய தென்காசி மாணவர்கள்.

உக்ரைன்- ரஷ்யா போர் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் போர் காரணமாக அவதியுற்று வருகின்றனர். அங்குள்ள மாணவர்களை மத்திய மாநில அரசுகள் மீட்க துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி தமிழக அரசின் நடவடிக்கையால் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று காலை தங்கள் சொந்த ஊர் திரும்பினர். அவர்களை திமுகவினர் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

மேலும் போர் குறித்து மீண்டு வந்த மாணவர்கள் கூறுகையில், தாங்கள் உக்ரைன் நாட்டில் கார்கியூவ் என்ற பகுதியில் இருந்ததாகவும் 5 நாட்களாக போரை நேரடியாக பார்த்ததாகவும் கூறினர். மேலும் தாங்கள் இருந்த பகுதிக்கு அருகிலேயே குண்டு வெடிப்புகள் நடந்ததாகவும், பதுங்குகுழியில் தங்கி உயிர்பிழைத்ததாகவும் கூறிய அவர்கள் பிறகு மாணவர்களாக ஒன்று சேர்ந்து உக்ரைன் எல்லையே கடந்து வந்ததாக தெரிவித்தனர்.

பின்னர் இந்திய அரசு மீட்டதாகவும், டெல்லி வந்த தங்களை தமிழக அரசு உணவு அளித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர் என தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்ததுடன், தமிழகத்திலேயே மருத்துவ மேற்படிப்பை தொடர உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News