நகராட்சி மன்ற கூட்டத்தில் ஒருமையில் பேசிக்கொண்ட நகர்மன்ற தலைவி, பெண் கவுன்சிலர்
செங்கோட்டை நகராட்சி மன்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவியும், பெண் கவுன்சிலரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசிக்கொண்டதால் பரபரப்பு.;
நகர்மன்ற கூட்டத்தில் ஒருமையில் பேசிக் கொண்ட நகர்மன்ற தலைவியும், கவுன்சிலர்களும் பேசிக் கொண்ட காட்சி.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நகர மன்ற தலைவி ராமலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மன்ற பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நெகிழி இல்லா நகராட்சியை உருவாக்கும் விதமாகவும் மஞ்சள் பை திட்டத்திற்கு விழிப்புணர்வு செய்யும் விதமாக 2ஆயிரம் பைகளுக்கு 52ஆயிரம் மன்றத்திக் செலவு கோரப்பட்டது. செலவு தொகை அதிகம் உள்ளதாக மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து அதிமுக-வை சேர்ந்த நகர்மன்ற தலைவி வார்டு குறித்து அதிமுக உறுப்பினரே விமர்சனம் செய்த நிலையில் இருவர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நகர்மன்ற தலைவி ராம லட்சுமியும், 3வது வார்டு உறுப்பினர் சுடர் ஒளியும் ஒருவர்க்கொருவர் ஒருமையில் பேசிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவி உறுப்பினர்களை மரியாதையாக பேச வேண்டும் என வார்டு உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவியை அறிவுறுத்தினர்.