அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர் கைது

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2021-09-17 03:08 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டம்,சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது கிராம நிர்வாக அலுவலகம் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த பெரிய தெருவை சேர்ந்த சொக்கையா என்பவரின் மகன் ராமையா (68) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் 11,200 மதிப்பிலான 280 கேரளா லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News