கேரளாவில் இருந்து விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை கொண்டுவந்த நபர் கைது
புளியரை சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை கொண்டுவந்த நபர் கைது;
தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள சோதனைச்சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, புளியங்குடியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (42) என்பவர் கேரளாவிலிருந்து லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.
அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2330 மதிப்பிலான 53 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்யப்பட்டது