புளியரை சோதனை சாவடியில் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
விற்பனைக்காக சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை கேரளாவில் இருந்து தமிழகம் கொண்டு வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்;
புளியரை சோதனை சாவடியில் நடத்தப்பட்ட சோதனை ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், சோதனை சாவடிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் சார்பு ஆய்வாளர் முத்து கணேசன் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் விற்பனைக்காக சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை கேரளாவில் இருந்து தமிழகம் கொண்டு வந்த சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்த அற்புத மணி என்பவரின் மகன் முருகேசன் (66) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1760 மதிப்பிலான 44 லாட்டரி சீட்டுகளும், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் முருகன் (58 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1520 மதிப்பிலான 38 லாட்டரி சீட்டுகளும்,மற்றும் விருதுநகர் மாவட்டம் வையாபுரியை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் முருகன் (52 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 26,600 மதிப்பிலான 565 லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது