புளியரை சோதனைச்சாவடியில் ரூ. 21 ஆயிரம் லாட்டரி சீட்டு பறிமுதல்

புளியரை சோதனைச்சாவடியில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2021-12-04 01:30 GMT

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாட்டரி சீட்டுகள் போன்றவற்றை கொண்டு வருவதை முற்றிலும் தடுக்கும் விதமாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில்,  சோதனைச்சாவடிகளில், காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள புளியரை சோதனைச்சாவடியில், சார்பு ஆய்வாளர் முத்து கணேசன் மற்றும் காவலர் சாகுல் ஹமீது ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் விற்பனைக்காக சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை கேரளாவில் இருந்து தமிழகம் கொண்டு வந்த கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சித்திரை கண்ணு என்பவரின் மகன் வேலுச்சாமி (56) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 21,600 மதிப்பிலான 540 லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News