சேர்ந்தமரத்தில் வருமுன் காப்போம் திட்ட முகாம்: எம்பி துவக்கி வைப்பு

சேர்ந்தமரத்தில் சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.;

Update: 2022-04-28 12:34 GMT

சேர்ந்தமரத்தில் சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை எம்பி தனுஸ் எம்.குமார் தொடங்கி வைத்தார்.

சேர்ந்தமரத்தில் சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம். தமிழக பொது சுகாதார துறை சார்பாக ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து நடத்தும் சுகாதார திருவிழா கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்  மேலநீலிதநல்லூர் வட்டாரம் சேர்ந்தமரம் கிராமம் புனித ஜோசப் பெண்கள் தொடக்கப்பள்ளியில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவ பத்மநாதன் முன்னிலையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஸ் எம்.குமார்  தொடங்கி வைத்தார்கள்.

இம்முகாமில் மேலநீலிதநல்லூர் வட்டார ஒன்றிய தலைவர் மாதவி மற்றும் ஊராட்சிகளை சார்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் மதனசுஜாகர் வரவேற்புரை ஆற்றி திட்ட முகாம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிகிச்சை அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அட்டை, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் மற்றும் மகப்பேறு சஞ்சீவினி பெட்டகம் வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பித்தார்கள்.

இம்முகாமில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், சித்த மருத்துவம், பல், தோல் சிகிச்சை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு மாத்திரைகள் வழங்கப்பட்டது. ஈ.சி.ஜி, ஸ்கேன் ஆய்வகம் சார்ந்த பரிசோதனைகளும் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசியும் இம்முகாமில் செலுத்தப்பட்டது. சிறப்பம்சமாக ரத்த தான முகாம் நடைபெற்றது. மேலும் உணவு பாதுகாப்பு ,சித்த மருத்துவம், டெங்கு சிக்குன்குனியா, குடும்பநலம், தொழுநோய், காசநோய், ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டம் அரங்கங்கள் அமைக்கப்பட்டு சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட திட்டங்களை பற்றி மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்தல், இ.சஞ்சீவினி எனப்படுகிற தொலைபேசி வாயிலான மருத்துவ ஆலோசனைகளும் சேவைகளும் வழங்கப்பட்டன. இம்முகாமினை துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் தென்காசி, டாக்டர் .எம். அனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படி வட்டார மருத்துவ அலுவலர் அவர்களின் மேற்பார்வையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பி தனபாலன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுப்பையா ஆகியோரின் கீழ் வட்டாரத்தைச் சார்ந்த சுகாதாரத்துறை ஊழியர்களால் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News