மத்திய அரசை கண்டித்து செங்கோட்டையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து செங்கோட்டையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2024-07-02 13:22 GMT

செங்கோட்டை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுவதும் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் முன்பு திமுக நகர செயலாளரும் வழக்கறிஞருமான வெங்கடேசன் தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மத்திய அரசானது மிகப்பெரிய மூன்று இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தை மாற்றி அமைத்துள்ளது.குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சி சட்டம் என முக்கியமான குற்றவியல் நடைமுறை சட்டங்களை மாற்றி சமஸ்கிருத மொழியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது

செயல்படாத சமஸ்கிருத மொழியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சட்டத்தால் பொதுமக்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோர் பாதிப்படைகின்றனர். மத்திய அரசானது இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் அதுவரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News