செங்கோட்டை நகராட்சியில் பசுமை மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

செங்கோட்டை நகராட்சி மற்றும் மழை நண்பர்கள் குழு சார்பில் பசுமை மரக்கன்றுகள் நடும் திட்டம் நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி துவக்கி வைத்தார்.

Update: 2022-05-07 15:45 GMT

பசுமை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வல்லம் ரோட்டில் அமைந்துள்ள கசடு கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் வைத்து நகராட்சி நிர்வாக இயக்குனா் உத்தரவின்படி, நகராட்சி மண்டல இயக்குனா் அறிவுறுத்தலின் பேரில் துாய்மை இந்தியா திட்ட பசுமை மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் திட்ட துவக்க விழா நடந்தது.

விழாவிற்கு நகராட்சி ஆணையாளா் இளவரசன் தலைமைதாங்கினார். சுகாதார அலுவலா் இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி, நகரமைப்பு ஆய்வாளா் பர்குணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வருவாய் ஆய்வாளா் லட்சுமணன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தனராக நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினா் செண்பகராஜ், துாய்மை இந்தியா திட்ட பணியாளா்கள், துப்புரவு பணியாளா்கள், மேற்பார்வையாளா்கள், டிபிசி துாய்மை பணியாளா்கள், நகராட்சி பணியாளா்கள், துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் குமார், செல்வராஜ், மணிகண்டன், கலா, கெங்கா மேற்பார்வையாளா் கருப்பசாமி மழை நண்பர்கள் குழு உறுப்பினா்கள் காளிராஜ், இப்ராஹீம், நேசமணி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News