அண்ணா உருவப் படத்தை துணியில் தூரிகை கொண்டு வரைந்தவர்களுக்கு பாராட்டு

செங்கோட்டையில் அண்ணா உருவப் படத்தை துணியில் தூரிகை கொண்டு வரைந்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;

Update: 2022-09-21 04:51 GMT

செங்கோட்டையில் அண்ணா உருவ படத்தை துணியில் தூரிகை கொண்டு வரைந்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பேரறிஞர் .அண்ணா  பிறந்தநாளை முன்னிட்டு செங்கோட்டையில் அண்ணா உருவப் படத்தை துணியில் தூரிகை கொண்டு வரைந்து வண்ணம் பூசுதல் நடைபெற்றது. 10 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்ட துணியில் இலஞ்சி ராமசாமி பிள்ளை ஓவிய ஆசிரியர் கணேசன்  தலைமையில் 20 மாணவ மாணவிகள் இந்த படத்தை வரைந்தார்கள் .வல்லம் நேஷனல் பள்ளி மாணவர்கள் மேளதாளங்கள் இசைக்க செங்கோட்டையின் முக்கிய பகுதிகள் வழியாக நூலகத்தை வந்தடைந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா  கலந்துகொண்டு ஓவியம் வரைந்த மாணவர்களையும் இந்த முயற்சி எடுத்த ஆசிரியர் பெருமக்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் .நூலக வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய இந்த முயற்சியை பலரும் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News