கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பாமக.,வினர் தீவிர வாக்கு சேகரிப்பு
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், நெடுவயல் பகுதிகளில் பாமக நிர்வாகிகளுடன் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், நெடுவயல் பகுதிகளில் பாமக நிர்வாகிகளுடன் வேட்பாளர் ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற 6ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 7-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு இன்று நெடுவயல் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வன்னியர் சங்க மாநில இணை செயலாளர் இசக்கி படையாச்சி, மாநில துணைத் தலைவர்கள் அய்யம்பெருமாள், சேது. அரிகரன் மாநில துணை பொதுச் செயலாளர்கள் இசக்கிமுத்து, திருமலைக்குமார சாமி யாதவ், மாவட்ட செயலாளர் சீதாராமன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் இசக்கிராஜ் ஆகியோர் பேண்ட் வாத்தியம் முழங்க வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வேட்பாளர் ராஜேந்திரன் நெடுவயல் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய நாட்டாண்மைகளை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றதுடன் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டனர். அப்போது வேட்பாளர் ராஜேந்திரன் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தார்.
வேட்பாளருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் சென்றனர்.